சுடச்சுட

  

  புதுவை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வி. நாராயணசாமி, காரைக்காலில் திங்கள்கிழமை பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு கோரினார்.

  அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  கடந்த 5 ஆண்டுகளில் புதுவைக்கு மத்திய அரசின் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால், புதுவையின் வளர்ச்சிக்கு நான் முட்டுக்கட்டை போடுவதாக முதல்வர் ரங்கசாமி கூறி வருகிறார்.

  கடந்த 3 ஆண்டுகளில் தான் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், நான் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் என்னுடன் ஒரே மேடையில் முதல்வர் ரங்கசாமி விவாதிக்க தயாரா என நான் விடுத்த சவாலுக்கு முதல்வர் பதிலளிக்காதது ஏன்?.

  இலங்கை எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்ற முறையில் இது ஏற்புடையதல்ல என்று கருதுகிறேன். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் இரு நாட்டின் நட்புறவும் அவசியம் என்றார்.புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், எம்எல்ஏ பி.ஆர்.என்.திருமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai