சுடச்சுட

  

  புதுச்சேரி ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

  6 முதல் 9ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியை சுஜாதா வரவேற்றார். ஆசிரியர் முத்துகிருட்டிணன் முன்னிலை வகித்தார்.

  உலக மகளிர் தினம் குறித்து ஆசிரியர்கள் அமல்ராஜ், ரமணி மாதவன் ஆகியோர் உரையாற்றினர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டன. ஓவிய ஆசிரியர் சம்பத் நீஸ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai