சுடச்சுட

  

  ஆளுநர், முதல்வருடன் ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு

  By புதுச்சேரி  |   Published on : 01st April 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய நாட்டு துணைத்தூதர் சென் கெல்லி, முதல்வர் ரங்கசாமியையும், துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவையும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

  ஆஸ்திரேலிய நாட்டு துணைத்தூதர் சென் கெல்லி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது, புதுச்சேரியில் ஆஸ்திரேலியா நாட்டின் சார்பில் திட்டங்கள், தொழில்கள் தொடங்குவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.  அதேபோல, புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவையும் அவர் சந்தித்துப் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai