சுடச்சுட

    

    இடதுசாரிகள் கூட்டணி வேட்பாளர் விசுவநாதன் வாக்கு சேகரிப்பு

    By புதுச்சேரி  |   Published on : 01st April 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மக்களவைத் தொகுதி இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் ஆர்.விசுவநாதன் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

     காலையில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் அரியாங்குப்பம், நல்லவாடு, அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம், நகர கமிட்டிச் செயலாளர் என்.பிரபுராஜ், மதிவாணன், சரவணன், பார்வார்டு கட்சித் தலைவர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அபிஷேகம், கீதாநாதன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பகுதிக்குழு நிர்வாகிகள் திரளானோர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai