சுடச்சுட

    

    கடற்கரையில் திமுக வேட்பாளர் நாஜிம் வாக்கு சேகரிப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் நாஜிம் ஞாயிற்றுக்கிழமை இரவு சண்டே மார்க்கெட், கடற்கரைப் பகுதிகளில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியது: புதுவை சட்டப்பேரவையில் கடந்த 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக உள்ளேன். புதுவை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளேன். நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்தால் புதுவையின் முனனேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

    தொழில் வளம், விவசாயம் பெருக உரிய நடவடிக்கைஎடுப்பேன் என்றார்.

    சண்டே மார்க்கெட் பகுதியில் பூ வியாபாரிகள், நடைபாதை கடை வியாபாரிகள்,கடற்கரையில் பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

    அவருடன் திமுக நிர்வாகிகள் இரா.சிவா, அனிபால் கென்னடி, எஸ்.பி.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தைரியநாதன், தொகுதிச் செயலர் ஆறுமுகம், தொண்டரணி அமைப்பாளர் குணாதிலீபன், இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ் உள்பட பலர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai