சுடச்சுட

  

  காங்கிரûஸ தோல்வியுற செய்ய வேண்டும்: மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் கட்சியை இந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

  இதுகுறித்து அந்த இயக்கத்தின் செயலர் ஜெகன்நாதன் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசு ஈழப்பிரச்னை, கச்சத்தீவு உரிமை, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னை என அனைத்திலும் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. ராஜபட்சவுடன் கைகோர்த்து இலங்கையில் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது.

  இந்த இனப்படுகொலை, போர் குற்றங்கள் குறித்தும் உலக விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவாகி வருகிறது. ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை இந்திய அரசு ஆதரிக்காமல், இலங்கையை காப்பாற்றுவதற்காக வாக்கெடுப்பை புறக்கணித்ததை கண்டிக்கிறோம்.

  மக்களவைத் தேர்தலில் புதுவை, தமிழக மக்கள் காங்கிரஸýக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai