சுடச்சுட

  

  புதுவை அருகே, காரும் பைக்கும் மோதிக்கொண்டதில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட இருவர் திங்கள்கிழமை இறந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  புதுவை அருகே தமிழகப் பகுதியான வானூர் வட்டம், பெரம்பை நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் (40), ஓட்டுநர். அதே பகுதியைச் சேர்ந்த ராஜமூர்த்தி மகன் சூர்யா (20), புருஷோத்தமன் மகன் குமரேசன் (19). இவர்கள் இருவரும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். நண்பர்களான மூன்று பேரும் கடைவீதிக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முருகனின் பைக்கில் புதுவை நோக்கி வந்துள்ளனர். பத்துக்கண்ணு சாலை சந்திப்பில் திரும்பியபோது, பைக்கும் புதுவை நோக்கி வானூர் வட்டம், கடப்பேரிக்குப்பத்தைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் தயாநிதி (23) ஓட்டி வந்த காரும் மோதிக்கொண்டன.

  இதில் பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முருகன், சூர்யா, குமரேசன் ஆகியோர் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி முருகன், சூர்யா ஆகியோர் திங்கள்கிழமை இறந்தனர். குமரேசன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்துப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன், தலைமைக் காவலர் புருஷோத் ஆகியோர், கார் ஓட்டுநர் தயாநிதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai