சுடச்சுட

    

    புதுவை வாகன சோதனையின்போது தங்கம் என நினைத்து கவரிங் நகையை போலீஸார் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுவை ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர்உசேன், கீர்த்தி மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனை நடத்தினர். மறைமலை அடிகள் சாலை சினிமா தியேட்டர் எதிரே நடைபெற்ற சோதனையின்போது, காரில் வந்தவரைப் பிடித்து சோதனை நடத்தினர்.

    அப்போது, அரை கிலோ அளவிலான தங்க நகைகள் ஆவணங்களின்றி எடுத்து வந்ததாக காரில் வந்தவரை போலீஸார் பிடித்து வந்தனர். அவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில், அவர் புதுவை சின்னக்கடைப் பகுதியைச் சேர்ந்த ரஷீத்கான் (25) என்பதும், அந்தப் பகுதியில் கவரிங் நகை கடை வைத்துள்ளதும், விற்பனைக்காக அவர் கவரிங் நகைகளை வெளியூரில் இருந்து வாங்கி வந்ததும் தெரிந்தது.

    இந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஒதியஞ்சாலைப் போலீஸார், திங்கள்கிழமை வணிகவரித் துறையினரிடம் தகவல் தெரிவித்து அவர்களிடம் கவரிங் நகைகளை ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai