சுடச்சுட

  

  புதுவையில் தட்டு வண்டித் தொழிலாளி மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  புதுவை கண் டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (40). தட்டு வண்டி ஓட்டி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் பெரிய மார்க்கெட் பகுதிக்கு தட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றிருந்தார். அங்கு நள்ளிரவு வரை பொருள்களை ஏற்றி, இறக்கி வேலை செய்துவிட்டு திரும்பியவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

  இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை சின்னசுப்பராய வீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

  இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் போலீஸýக்கு தகவல் கொடுத்தனர்.

  அதன் பேரில், பெரியகடை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணிக்கத்தின் சடலத்தைக் கைப்பற்றி புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai