சுடச்சுட

    

    பாஜக கூட்டணிக்கு கைவினைக் கலைஞர்கள் சங்கம் ஆதரவு

    By புதுச்சேரி  |   Published on : 01st April 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணிக்கு அகில இந்திய கைவினைக் கலைஞர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரனை, கைவினைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதற்கான கடிதத்தையும் அவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் ஆர்.வி.சாமிநாதன், அன்புச்செல்வம், ரவிச்சந்திரன், பரந்தான், கைவினைக் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai