சுடச்சுட

  

  பாமக முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்

  By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மண்ணாடிப்பட்டு பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

  இதற்கான விழா திருக்கனூரில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி முன்னிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் தனது ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

  அப்போது நாராயணசாமி பேசியது: அருள்முருகன் காங்கிரஸ் கட்சியில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் ரங்கசாமி தான் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. புதுவை மாநில வளர்ச்சிகாக நான் மத்திய அரசிடம் வாதாடி பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுத் தந்துள்ளேன்.

  நான் 5 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்து தைரியமாக கூற முடியும். ஆனால் முதல்வர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் தனது அரசு செய்த பணிகளை பட்டியலிட முடியுமா? ஓரே மேடையில் விவாதிக்க வருமாறு கேட்டேன். அதற்கும் பதில் தரவில்லை.

  எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முதல்வருக்கு நேரமில்லை. முதல்வர் ரங்கசாமியின் அரசால் புதுவை மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர் என்றார் நாராயணசாமி. முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ ஏ.ராஜாராமன், செய்தித் தொடர்பாளர் ஏ.வி.வீரராகவன், ஜெனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai