சுடச்சுட

  

  புதுச்சேரி பாரதிய லேபர் யூனியன் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சாரம் பகுதியில் நடைபெற்றது.

  மூத்த தலைவர் கே.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் பி.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஏஎப்ஃடி ஆலை தொழிற்சங்கச் செயலர் டி.பூவராகவன் வரவேற்றார். நிர்வாகிகள் எம்.கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்க  ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன், ஜி.முருகையன், ராமு, வி.பத்மநாபன், எஸ்.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பாரதி மில் சாயப்பட்டறையை விரைவில் திறந்து தொழிலாளர்களின் பாதிப்பை போக்க வேண்டும். இஎஸ்ஐ வருமான வரம்புக்கு மேல் தொழிலாளர்கள் ஊதியம் உள்ளதால், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு ஆலை நிர்வாகம் இஎஸ்ஐக்கு நிகரான மருத்துவக் காப்பீடு படிகளை வழங்கவும், விபத்துக் காப்பீடு உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai