சுடச்சுட

  

  பிரசாரக் கூட்டத்தில் டீ: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு

  By புதுச்சேரி  |   Published on : 01st April 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வில்லியனூரில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் இனிப்புகள், டீ வழங்கியதாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  புதுவை அருகே உள்ள வில்லியனூர் லட்சுமி மண்டபத்தில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ நடராஜன் தலைமை வகித்தார். முதல்வர் என்.ரங்கசாமி, வேட்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தை கண்காணித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலமுருகன் தலைமையிலான குழுவினர், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, இனிப்புகள் மற்றும் டீ வழங்கியதாக புகார் கொடுத்தனர்.

  அதன் பேரில், வில்லியனூர் போலீஸார், தேர்தல் விதிகளை மீறியதாக கூட்டத்தை ஏற்பாடு செய்த முன்னாள் எம்எல்ஏ நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

  மற்றொரு வழக்கு: இதேபோல வில்லியனூர் கிழக்கு ரத வீதியில் உள்ள நடராஜன் வீட்டுக்கு முன்பு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைத்து ஆக்கிரமித்திருந்ததாக, தேர்தல் பறக்கும் படையினர் புகார் கொடுத்தனர். இதன் பேரிலும், நடராஜன் மீது வில்லியனூர் போலீஸார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர்.

  புதுவையில் அதிமுக, திமுகவைத் தொடர்ந்து, ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மீதும் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai