சுடச்சுட

  

  "பிரசார செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்'

  By காரைக்கால்  |   Published on : 01st April 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசியல் கட்சியினரின் பிரசார செலவினங்களை முறையாக கண்காணித்து பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் துறையினருக்கு, மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் சிவேந்திரகுமார் குப்தா அறிவுறுத்தினார்.

  காரைக்காலில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சிவேந்திரகுமார் குப்தா கூட்டத்தில் பேசியது:

  கட்சி, வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணித்து பதிவு செய்ய வேண்டும். இதை உடனுக்குடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

  நட்சத்திரப் பேச்சாளர்கள் வந்தால், தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்போர் தீவிரமாக செயல்பட வேண்டும். குறிப்பாக, போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் எங்கு பிரிண்ட் செய்யப்பட்டது, எத்தனை என்ற விவரங்கள் சேகரிக்க வேண்டும்.  சோதனையின்போது பணம், மதுபானம் பறிமுதல் செய்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றார்.

  கூட்டத்தில், ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ.முத்தம்மா, கூடுதல் ஆட்சியர் எல்.முகமது மன்சூர், துணை ஆட்சியர் மாணிக்கதீபன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படையினர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai