சுடச்சுட

    

    பிரெஞ்சு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

    By காரைக்கால்  |   Published on : 01st April 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் பிரெஞ்சு நிர்வாகத்தால் நடத்தப்படும் பிரெஞ்சு பள்ளியின் மாணவர்களுக்கு திங்கள்கிழமை தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

    காரைக்கால் பயர் சேப்டி கன்சல்டன்ஸி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தீ விபத்து ஏற்படும் முறை, ஏற்படாமல் தடுக்கும்விதம், தீவிபத்தின்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து பயிற்சியாளர்கள் ராமு, சுரேஷ் சக்திவேல் ஆகியோர் விளக்கினர்.

    பயிற்சியில், தீ பரவாமல் தெளிப்பான்களைக் கொண்டு தடுக்கும் செயல்பாட்டினை செய்து காட்டினர். பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாட்டினை பள்ளி இயக்குநர் குணாகண்ணுசாமி செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai