சுடச்சுட

  

  புதுவையில் திங்கள்கிழமையும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

  புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய சனிக்கிழமை (மார்ச் 29) யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஞாயிறு விடுமுறை நாளாகும். திங்கள்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பாக இருந்தாலும் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

  கட்சிகளின் மனு தாக்கல் விவரம்: ஏப்ரல் 1-ம் தேதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் மனு தாக்கல் செய்ய உள்ளார். வரும் 2-ம் தேதி ஆம் ஆத்மி வேட்பாளர் ரங்கராஜனும், 3-ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விசுவநாதன் ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் நாஜிம் ஆகியோர் 5-ம் தேதி மனுதாக்கல் செய்ய உள்ளனர். பாமக தரப்பில் கேட்டதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai