சுடச்சுட

  

  புதுவை தீபம் சமூக சேவை இயக்கம் சார்பில் மகளிர் விழிப்புணர்வு நிகழ்ச்சி காலாப்பட்டில் அண்மையில் நடைபெற்றது.

  இயக்கத்தின் தலைவர் ரமேஷ் டார்லிங்டன் வரவேற்றார். எழுத்தாளர் புதுவை பார்த்தசாரதி மகளிர் தின விழிப்புணர்வு குறித்துப் பேசினார். மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் பாவலர் சண்முகசுந்தரம் தலைமையேற்று, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லலிதா, பெண்கள் விழிப்புணர்வு மற்றும் குடும்ப நல ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். விழாவில் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர்.

  இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச் செயலாளர் ஹேமலதா, மூர்த்தி, செவிலியர் ஜனனி, தீபம் சமூக சேவை இயக்க பொருளாளர் கற்பகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துணைத் தலைவர் சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai