சுடச்சுட

  

  மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்

  By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடத்திய காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என நடிகை பாத்திமா பாபு கூறினார்.

  புதுச்சேரி எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஓமலிங்கத்தை ஆதரித்து அவர் திங்கள்கிழமை திருபுவனை, சேராப்பட்டு, முதலியார்பேட்டை, சாரம், நெல்லித்தோப்பு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:

  வரும் நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாகும். மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு மற்ற நாடுகளை போல் இந்தியாவும் பொருளாதார வல்லரசாக மாற வேண்டும் என்றால் அதிமுக வெற்றி பெற வேண்டும்.

  மூன்று ஆண்டுகள் முதல்வராக உள்ள ரங்கசாமி மாநில வளர்ச்சிக்கும், மக்கள் வாழ்க்கைத்தரம் உயரவும் எதுவும் செய்யவில்லை.

  புதுவையில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. கூரை வீடுகள் ஒன்று கூட கல்வீடாக மாற்றப்படவில்லை. அரசின் தவறான கொள்கையால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.  கரும்பு விவசாயிகளுக்கு நாட்டில் எங்கும் இல்லாத வகையில் டன்னுக்கு ரூ.2,650 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆனால் புதுவையில் ஓராண்டாகியும் கரும்பு விவசாயிகளுக்கு பணம் தரப்படவில்லை.

  மத்திய அமைச்சர் நாராயணசாமி தில்லியில் செல்வாக்குடன் திகழ்ந்தார். ஆனால் எந்தத் திட்டத்தையும் புதுவைக்கு கொண்டு வரவில்லை. வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

  சிறப்புப் பொருளாதார மண்டலம் வரவில்லை. 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார். அதுவுமில்லை. மத்திய அமைச்சரும், முதல்வரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியே காலம் கழிக்கின்றனர் என்றார் அவர்.

  எஸ்.செம்மலை எம்பி, மாநிலச் செயலாளர் ஆ.அன்பழகன் எம்எல்ஏ, பேரவைச் செயலர் ஓம்சக்தி சேகர் எம்எல்ஏ, பாஸ்கர் எம்எல்ஏ, தொகுதிச் செயலர் ரவி, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, மகாதேவி, மகேஸ்வரி உள்பட பலர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai