சுடச்சுட

    

    மதுக்கடைகளை ஏப்ரல் 24-வரை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு

    By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை மதுக்கடைகளை இரவு 10 மணிக்குள் மூடி விட வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த கலால் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலால் துறை பறக்கும்படை 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தற்போது இரவு 11 மணி வரை இயங்கும் மதுக்கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி புதுவை மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள், பார், மது அருந்த அனுமதி உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சரியாக இரவு 10 மணிக்கு மதுபானங்கள் விற்பனையை முடிக்க வேண்டும்.

    இவ் உத்தரவு ஏப்ரல் 24-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மொத்தம் 260 மதுக்கடைகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai