சுடச்சுட

  

  மருத்துவக் கல்லூரி மாணவிகள் மாயம்: சீனியர் எஸ்பி நேரில் ஆய்வு

  By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே மருத்துவ மாணவிகள் 2 பேர் மாயமானது குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால், சீனியர் எஸ்பி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். மாணவிகளின் வலைதள நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் இளவரசி (18), திருச்சி பகுதியைச் சேர்ந்த மாதையா மகள் ராதிகா (18) ஆகியோர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

  கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் கடந்த வியாழக்கிழமை இரவு காணாமல் போயினர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  கல்லூரி நிர்வாகம், விடுதி மாணவிகள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவர்கள் கடத்தப்பட்டதற்கான தடயங்களும் சிக்கவில்லை.

  இதனையடுத்து, மாணவிகளின் லேப் டாப்பை ஆய்வு செய்து அதன் மூலம் அவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட வலை தளங்களில் அவர்களை தொடர்பு கொண்டிருந்த இளைஞர்களிடமும் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் நேரில் எந்த தொடர்புமில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஓம்வீர்சிங், திங்கள்கிழமை கிருமாம்பாக்கம் சென்று மருத்துவக் கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தினார். மாணவிகளை விரைந்து கண்டுபிடித்திட போலீஸாரிடம் ஆலோசனை நடத்தினார்.

  இதுகுறித்து தனிப்படை போலீஸார், சென்னை, கடலூர், திருச்சி, விழுப்புரம் பகுதிகளுக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவிகளின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் மாணவிகள் மீட்கப்படுவார்கள் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai