சுடச்சுட

  

  யுகாதி திருநாளையொட்டி, காரைக்கால் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

  ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதி அருகே ஊஞ்சல் அமைத்து அதில் ஸ்ரீதேவி பூதேவியாருடன் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

  மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. மூலவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டது.

  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ. ராஜராஜன்வீராசாமி, தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி மற்றும் மாவட்ட நாயுடுகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai