சுடச்சுட

  

  உழவர்கரை தொகுதி நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு

  Published on : 02nd April 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

   இது குறித்து மாநில ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

   ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை தொகுதியின் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் உழவர்கரை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம் ஆகிய பிரிவுகளின் தலைவர்களும், தொண்டர்களும் நாளை முதல் 15-ம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளனர். 

   புதன்கிழமை காலை 8 மணிக்கு அஜீஸ் நகரில் வாக்குச் சேகரிக்கும் பணியை தொடங்கி அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், மூகாம்பிகை நகர், பெருமாள்ராஜா கார்டன் ஆகிய பகுதிகளிலும், மாலையில் புதுநகரில் தொடங்கி டெலிகாம் காலனி வரையிலும் வாக்குச் சேகரிக்கின்றனர்.

   3-ம் தேதி நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அன்று மாலையில் சிவகாமி நகர், ஏரிக்கரை வீதி, தேவா நகர் பகுதிகளில் வாக்குச் சேகரிக்கின்றனர்.

  தொடர்ந்து 4-ம் தேதி ரெட்டியார்பாளையம் தொடங்கி சுதாகர் நகர் வரை காலையிலும், மாலையில் கம்பன் நகரில் தொடங்கி மோரிசான் தோட்டம் வரையிலும் பிரசாரம் செய்கின்றனர்.

  5-ம் தேதி காலை பாவாணர் நகரிலும், மாலையில் ஜவகர் நகர், விக்டோரியா நகரிலும், 6-ம் தேதி காலை ஜவகர் நகர் குடியிருப்பிலும், மாலையில் இந்துநகர், எஸ்பிஐ நகர் பகுதியிலும் 7-ம் தேதி காலையில் வயல்வெளியில் தொடங்கி ஸ்ரீநிவாசா அபார்மென்ட் வரையிலும், 8-ம் தேதி காலையில் சக்திநகரில் தொடங்கி ஜான்குமார் நகர் வரையிலும் வாக்குச் சேகரிக்கின்றனர்.

  தொடர்ந்து 9-ம் தேதி ஜே.ஜே.நகரில் தொடங்கி மூலக்குளம் வரையிலும், 10-ம் தேதி பாரீஸ் நகர் தொடங்கி திருமலைநகர் வரையிலும், 11-ம் தேதி குண்டுசாலை முதல் எம்ஜிஆர் நகர் வரையிலும், 12-ம் தேதி ஆசிரியர் காலனியில் தொடங்கி திருக்குறளார் நகர் வரையிலும், 13-ம் தேதி பி.வி.நகர் தொடங்கி முத்துப்பிள்ளைபாளையம் வரையிலும், 14-ம் தேதி அரும்பார்த்தபுரம் தொடங்கி கணபதி நகர் வரையிலும், 15-ம் தேதி சாலைத்தெரு தொடங்கி பசும்பொன் நகர் வரையிலும் வாக்குச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார் ரவிச்சந்திரன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai