சுடச்சுட

    

    காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

    Published on : 02nd April 2014 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் பாமக எம்எல்ஏ மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிந்துள்ளனர்.

    புதுவை அருகே உள்ள மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்முருகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திருபுவனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணைப்பு விழாவில், அவர், தனது ஆதரவாளர்கர்களுடன் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து கலந்து கொண்டார்.

    புதுவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில், தொண்டர்களுடன் கட்சிக் கொடிகள்  வந்ததாக, அருள்முருகன் மீது தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் சத்தியநாராயணா போலீஸில் புகார் கொடுத்தார்.

    இதன் பேரில், திருபுவனை போலீஸார், அருள்முருகன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai