சுடச்சுட

  

  புதுவையில் ஏற்பட்ட தீ விபத்துக்களில் 3 பைக்கள் எரிந்து சேதமடைந்தன.

  புதுவை லாஸ்பேட்டை கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இளமுருகன். இவர், தனது வீட்டின் முன்பு இரண்டு பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார். திங்கள்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் சிலர், பைக்கிற்கு தீவைத்துவிட்டு தப்பினர். இதில் பைக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கூரையும் எரிந்து சேதமடைந்தன.

  இது குறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  ஓடும் பைக்கில் தீ: அரியாங்குப்பம் ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர், செவ்வாய்க்கிழமை காலை பைக்கில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். அரியாங்குப்பம் பாலம் அருகே வந்த போது, திடீரென பைக் பழுதாகியது. உடனே குழந்தைகளை இறக்கி விட்டு,

  பைக்கை சரி பார்த்துள்ளதாகத் தெரிகிறது.

  அப்போது பைக் தீப்பிடிந்து எரிந்தது. இதில் சோமசுந்தரம் கையிலும் தீக்காயமடைந்தார்.

  இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai