சுடச்சுட

    

    நாராயணசாமி, ரங்கசாமி மோதலால் புதுவையில் வளர்ச்சி இல்லை: நாஜிம்

    Published on : 02nd April 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாராயணசாமி, ரங்கசாமி மோதலால் புதுவை வளர்ச்சி அடையவில்லை என்றார் புதுவை திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம்.

    காரைக்காலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நாஜிம், காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி வரும் காலத்தில் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், காரைக்கால் நீதிமன்ற வளாகம் புதிதாகக் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தவும், அதற்குத் தேவையான நிதியாதாரத்தை ஒதுக்க பாடுபட்டது குறித்தும் அவர்களிடம்  விளக்கி, திமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் நாஜிம் கூறியது: புதுவையில் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி, முதல்வர் என். ரங்கசாமிக்கு இடையே நடக்கும் மோதலால், ஒட்டுமொத்த புதுவையும் வளர்ச்சியடையவில்லை. மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவருவதால், அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து காரைக்கால் பகுதியில் பல திட்டங்களை கொண்டுவந்தேன்.

    புதுச்சேரி பிராந்தியத்தில் நான் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் திமுகவுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது.

    காரைக்காலில் முதன்மையான வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும். நடக்கவுள்ள தேர்தலில் புதுவையில் திமுக வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai