சுடச்சுட

  

  விழுப்புரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்த திருநங்கை கல்கி, தற்போது திடீரென தொகுதி மாற்றம் செய்துள்ளார். அவர் புதுவையில் போட்டியிட உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

   திருநங்கை கல்கி புதுவை அருகேயுள்ள கோட்டக்கரையில் வசிக்கிறார். திரைப்படத்தில் நடித்துள்ள கல்கி, கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

   இந்நிலையில் புதுச்சேரியில் போட்டியிட உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

  இது குறித்து கல்கி கூறியது: விழுப்புரம் தனித் தொகுதி. அதனால் அங்கு போட்டியிட இயலாது. எனவே, புதுச்சேரி தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்துள்ளேன். வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதில் முழு கவனம் செலுத்த உள்ளேன். புதுச்சேரி தொகுதி பொருளாதார மேம்பாடு பெற முழு முயற்சி எடுப்பேன். மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை தருவேன். வரும் 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வேன். அதன்பின் பிரசாரம் செய்வேன் என்றார் கல்கி.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai