சுடச்சுட

  

  புதுச்சேரி அடுத்த மணவெளி தொகுதியில் இடதுசாரிகள் கூட்டணி வேட்பாளர்  ஆர்.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

  மணவெளி தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்று வாக்குச் சேகரித்தார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வி.பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.எஸ்.அபிஷேகம், து.கீதநாதன், பூ.சரளா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  அபிஷேகப்பாக்கம் பகுதியில் தோட்டத்தில் பணிபுரிந்த பெண்கள், விவசாய தொழிலாளர்களிடமும் இடதுசாரிகள் வாக்கு சேகரித்தனர்.

  இடதுசாரிகள் செயல்வீரர்கள் கூட்டம்: புதுச்சேரி இடதுசாரிகள் நகரப்பகுதி செயல்வீரர்கள் கூட்டம் முத்தியால்பேட்டையில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகர்ச் செயலர் கே.முருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் நகர்ச் செயலர் என்.பிரபுராஜ் முன்னிலை வகித்தார்.  வேட்பாளர் ஆர்.விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அமு.சலீம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆ.ராஜாங்கம், பார்வர்டு பிளாக் செயலர் யு.முத்து, ஆர்.எஸ்.பி. செயலர் கே.லெனின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

  300-க்கும் மேற்பட்ட இடதுசாரி இயக்கத்தினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேட்பாளர் விசுவநாதனை வெற்றிப் பெறச் செய்ய தீவிரமாகப் பிரசாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai