சுடச்சுட

  

  புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வி. நாராயணசாமி காரைக்கால் தனி யூனியன் பிரதேச கோரிக்கைக்கு ஆதரவு தரவில்லை என காரைக்கால் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து அந்தக் குழுவின் அமைப்பாளர் எஸ்.பி. செல்வசண்முகம் செவ்வாய்க்கிழமை கூறியது:

  காங்கிரஸ் வேட்பாளர் வி. நாராயணசாமி, போராட்டக் குழுவைச் சேர்ந்த முனுசாமி, அப்துல்சலீம் உள்ளிட்ட நிர்வாகிகளை திங்கள்கிழமை அழைத்து பேசினார். அப்போது, தனி யூனியன் பிரதேச கோரிக்கையை நாராயணசாமி ஏற்கவில்லை. இதனால், போராட்டக் குழு காங்கிரûஸ ஆதரிக்க வாய்ப்பில்லை.

  ஏப்ரல் 8-ம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளோம்.

  எந்த கட்சி எங்களது கோரிக்கையை ஆதரிக்கிறதோ அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளோம். யாரும் முன்வராத நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி போராட்டக்குழு பொதுக் குழுக் கூட்டம் நடத்தி, இறுதி முடிவை அறிவிப்போம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai