சுடச்சுட

  

  விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி முயற்சி

  Published on : 02nd April 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கார் விபத்து வழக்கில் உரிய நஷ்டஈடு வழங்காத புதுவை தனியார் காப்பீடு நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்றதால் செவ்வாயக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

  புதுவை அருகே உள்ள கீழூர் சிவராந்தகத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (59). இவர், தனது மாருதி காரில் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றார். எழுத்தூர் அருகே சென்ற போது, கார் விபத்துக்குள்ளது.

  இந்த விபத்தில் காயமடைந்த ராமச்சந்திரன் இழப்பீடு வழங்கக் கோரி புதுவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம், விபத்து இழப்பீடாக ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்து 120 வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

  இந்த தொகை கிடைக்காததால், ராமச்சந்திரன் நிறைவேற்று மனு தாக்கல் செய்ததன் பேரில், இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

  இதில், நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி அவர், மீண்டும் மேல் முறையீடு செய்திருந்தார்.

  இதனை விசாரித்த புதுவை கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பக்கிரிசாமி, ராமச்சந்திரனுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.51 ஆயிரத்து 154 வழங்க தனியார் காப்பீடு நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

  இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை நேரு வீதியில் உள்ள தனியார் காப்பீடு நிறுவன அலுவலகத்துக்கு வந்த நீதிமன்ற கட்டளையை நிறைவேற்ற வந்தனர்.

   அந்த காப்பீட்டு நிறுவனத்தினர், இழப்பீட்டுத் தொகையை வழங்க கால அவகாசம் கேட்டதையடுத்து ஜப்தி நடவடிக்கையை தாற்காலிகமாக கைவிட்டதாக வாதியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai