சுடச்சுட

  

  வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து தீ: ரூ. 50 ஆயிரம் பொருள்கள் சேதம்

  Published on : 02nd April 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் வீட்டில் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீப்பிடித்து ரூ. 50 ஆயிரம் பொருள்கள் திங்கள்கிழமை இரவு நாசமாகின.

  காரைக்கால் புளியங்கொட்டை சாலையைச் சேர்ந்தவர் ஹமீம் மரைக்காயர். இவரது வீட்டின் சமையலறையில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. வீட்டிலிருந்துவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது.

  சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு செல்லும் குழாய் வழியே காஸ் வெளியேறி தீ விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சமையலறை மற்றும் அதனருகே வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

  தீயணைப்பு நிலைய அதிகாரி விவேகானந்தன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து காரைக்கால் காவல் நிலைய போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai