சுடச்சுட

  

  வேட்புமனுதாக்கலின் போது  செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களை அனுமதிக்க மறுப்பு

  Published on : 02nd April 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கலின் போது செய்தியாளர்களையும்,  புகைப்படக்காரர்களையும் அனுமதிக்க மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான தீபக்குமார் அனுமதிக்க மறுத்து விட்டார்.

   தமிழகம், புதுவையில் வரும் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது.

   அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் செய்தி சேகரிக்கவும், படமெடுக்கவும் சாரத்திலுள்ள் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.

  ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் போலீஸôர் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை.

  இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது:

   செய்தியாளர்கள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என ஆட்சியர் தீபக்குமார் உத்தரவிட்டுள்ளார் கூறினர்.

  இதையடுத்து ஆட்சியர் தீபக்குமாரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் அனைவரையும் உள்ளே அனுமதித்தார்.

   அதையடுத்து, பத்திரிகையாளர்களிடம் தீபக்குமார் கூறுகையில், நாங்களே புகைப்படக்காரர், விடியோ கிராபர் வைத்து படம் எடுத்து செய்தியாளர்களுக்கு மீடியா சென்டர் மூலம் அனுப்புவோம். யாருக்கும் அனுமதியில்லை. நிறைய பேர் வந்தால் குழப்பம் ஏற்படும். அதனால்தான் இந்த முடிவு என்றார்.

   தமிழகத்தில் செய்தியாளர்கள் வேட்புமனு தாக்கலில் அனுமதிக்கிறார்களே என்று கேட்டதற்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.

   இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்திடம் இது தொடர்பாக கேட்டதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுக்க அதிகாரமுள்ளது எனத் தெரிவித்தார்.

   தேர்தலை வெளிப்படையாக நடத்துவதாகக் கூறும் தேர்தல் அதிகாரி படம் எடுக்கவே அனுமதிக்க மறுப்பது இதுவே முதல்முறை. இது கண்டிக்கத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கவும் பத்திரிகையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai