சுடச்சுட

  

  ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட 4 பேர் மனு தாக்கல்

  By புதுச்சேரி  |   Published on : 03rd April 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வி.ரெங்கராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எஸ்.மூர்த்தி உள்பட 4 பேர் புதன்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

  புதுச்சேரி தொகுதியில் வரும் 24-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வேட்புமனுத் தாக்கல் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை

  அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம் மாற்று வேட்பாளர் பாண்டுரங்கன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) வேட்பாளர் பழனி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

  இந்நிலையில், புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வி.ரெங்கராஜன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் எஸ்.மூர்த்தி, முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், சுயேச்சை வேட்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் மாவட்டத் தேர்தல் அலுவலர் தீபக்குமாரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதோடு புதுவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 7 ஆகும்.

  ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் தொடங்கிய பேரணி, லெனின் வீதி வழியாகச் சென்றது. வேட்பாளர் ரெங்கராஜன், மாநிலச் செயலர் ரவி சீனிவாசன், செய்தித் தொடர்பாளர் செல்வின், தமிழ் எழுத்தாளர் தமிழ் மல்லன் மாநில செயற்குழு உறுப்பினர் பாலா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai