சுடச்சுட

  

  ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ரெங்கராஜன்,முன்னாள் எம்.பி. ராமதாஸ் சொத்து விவரம்

  By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெ.ரெங்கராஜன், முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம்:

  ஆம் ஆத்மி வேட்பாளர் ரெங்கராஜன்: கடந்த 2012-13-ல் ரெங்கராஜன் பெயரில் உள்ள மொத்த வருவாய் ரூ.7,25,254 ஆகும். அவரது மனைவி ராணிக்கு ரூ.6,46,655 வருவாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரெங்கராஜன் கையில் ரூ.6 லட்சம் கையிருப்பும், மனைவி ராணியிடம் ரூ.1 லட்சம் ரொக்கம் கையிருப்பும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரெங்கராஜன் பெயரில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ரெங்கராஜன் பெயரில் வங்கியில் ரூ.10 ஆயிரம், மனைவி ராணி பெயரில் ரூ.3,78,000 உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட தனிமுறை கடன், முன்பணம் வகையில் ரெங்கராஜன் பெயரில் ரூ.21 லட்சமும் அவரது மனைவி பெயரில் ரூ.11 லட்சமும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் அவரது பெயரில் ரூ.1,80,000 மதிப்புள்ள அசையாச் சொத்தும், அவரது மனைவி பெயரில் ரூ.8,31,000 மதிப்புள்ள அசையாச் சொத்தும் வாங்கப்பட்டது. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு முறையே ரூ.2 கோடி, ரூ.3 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மரபுரிமை வழியில் கிடைத்த சொத்தின் மதிப்பு ரூ.5,50,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலும் ரெங்கராஜன் பெயரில் ரூ.9 லட்சமும், மனைவி பெயரில் ரூ.25 லட்சமும், கடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ரெங்கராஜன் பெயரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்க நகைகளும், மனைவி பெயரில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் நகைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் சொத்து விவரம்: டாக்டர் ராமதாஸிடம் கையிருப்பு ரூ.10 ஆயிரம், மனைவி தனலட்சுமியிடம் கையிருப்பு ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளதாகவும், வங்கிகளில் ராமதாஸ் பெயரில் ரூ.3,50,000, மனைவி பெயரில் ரூ.75,000 வைப்புத் தொகை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  வங்கி மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் ராமதாஸ் பெயரில் ரூ.2,50,000 லட்சமும், மனைவி பெயரில் ரூ.4,45,000-லட்சமும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

  ராமதாசுக்கு இன்னோவா கார், டாடா இன்டிகா கார் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு ரூ.11,00,000 மதிப்புள்ள 700 கிராம் தங்க நகைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  மேலும் அசையாச் சொத்து வகையில் ராமதாஸ் பெயரில் ரூ.40,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்தும், மனைவி பெயரில் ரூ.12,54,000 மதிப்புள்ள அசையாச் சொத்தும் உள்ளது. மேலும் ராமதாஸ் பெயரில் வங்கியில் கார் கடனாக ரூ.4,04,861-மும், தனி நபர் கடனாக ரூ.3,00,000-மும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai