சுடச்சுட

    

    ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் வரத்து அதிகரிப்பு

    By காரைக்கால்,  |   Published on : 03rd April 2014 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன்பிடித் தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த மயில் மீன், கேரை மீன் உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டுதோறும் ஏப். 15 முதல் மே மாத இறுதி வரை 45 நாள்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த 45 நாள்கள் மீன் பிடிப்புத் தொழில் முடங்குவதால், தடைக்காலத்துக்கு முன்னதாகவே மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்துத் திரும்புகின்றனர்.

    தூண்டில் முறையில் கிடைக்கும் மயில் மீன், கேரை மீன் உள்ளிட்டவையும், சாதாரண சுறா, எலி சுறா வகைகளும் தற்போது ஏராளமாக கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக துறைமுகத்துக்கு திரும்பும் படகுகளில் 6 அடி உயரத்துக்கும் அதிகமான மயில், ஏவ், சுறா உள்ளிட்ட மீன்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

    மயில், கேரை மீன் கிலோ ரூ. 90, ஏவ் வகை மீன் கிலோ ரூ. 80, சாதாரண சுறா மீன் கிலோ ரூ. 150 முதல் 180 வரையிலும், எலி சுறா கிலோ ரூ. 90 என்ற விலையிலும் விற்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சில மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    மீன்பிடி தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் அரிய வகை மீன்கள் அதிகளவில் கிடைப்பது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai