சுடச்சுட

    

    கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

    By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    "நேர்மையான வாக்குப்பதிவு' என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தை கல்லூரி முதல்வர் பெ.நல்லசாமி தொடங்கி வைத்தார்.

    கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்ட உறுதிமொழிப் பலகையில் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் பா.அருளரசி, இரா.விசாலாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai