சுடச்சுட

  

  காங்கிரஸ், பாஜக கூட்டணியை புதுவை மக்கள் புறக்கணிப்பார்கள்

  By காரைக்கால்,  |   Published on : 03rd April 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை புதுச்சேரி மக்கள் புறக்கணிப்பது உறுதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  காரைக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியின் தேர்தல் பணிக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  புதுச்சேரி இடதுசாரி வேட்பாளர் ஆர். விஸ்வநாதனை ஆதரித்து காரைக்கால் மாவட்டத்தில் ஏப். 20-ம் தேதி வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபடுவது.

  ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அனைவருக்கும் கல்வி, உணவு, வேலை, சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்கிடவும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுத்திடவும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், சிறுபான்மையினர், தலித், பழங்குடியினரை பாதுகாத்திடவும் இடதுசாரி கட்சிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பாடுபடுவார்கள் என பிரசாரம் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

  என்.ஆர். காங்கிரûஸயும், காங்கிரஸ் கட்சியையும் மக்கள் தோற்கடிப்பார்கள். அதற்கேற்ப இடது முன்னணி தேர்தல் பணியை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

  கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் என்.எம். கலியபெருமாள் தலைமை வகித்தார். புதுச்சேரி மாநிலச் செயலர் வெ. பெருமாள், மாவட்டச் செயலர் அ. வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai