சுடச்சுட

  

  காரைக்கால் மாவட்ட என்.ஆர். காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் நியமனம்

  By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடாளுமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்ட மேலிடப் பார்வையாளராக என்.கோகுலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி என்ற டிஆர்.பட்டினம் தொகுதிகளுக்கு கோகுலகிருஷ்ணன் மேலிடப்பார்வையாளராக செயல்படுவார்.

  காரைக்கால் மாவட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மேலிடப்பார்வையாளரைத் தொடர்பு கொண்டு கட்சி வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என பொதுச் செயலர் வி.பாலன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai