சுடச்சுட

    

    திருவண்டார்கோவில் பகுதி குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுவை அருகே திருவண்டார்கோவில் சின்னபேட் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம்-புதுவை நெடுஞ்சாலையில் திருவண்டார்கோவில் அரசு உணவுப் பொருள் கிடங்கு எதிரே 50-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

    கடந்த 10 நாள்களாக தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளதாகவும், இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் பேசி, குடிநீர்ப் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai