சுடச்சுட

    

    சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

    By புதுச்சேரி  |   Published on : 03rd April 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் சாலையில் கிடந்த ரூ.8 ஆயிரம் பணத்தை போலீஸில் ஒப்படைத்த வங்கி ஊழியரை போலீஸார் பாராட்டினர்.

    புதுவையைச் சேர்ந்தவர் கிம்ராம் (28). இவர், ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையகத்தில் வேலை செய்கிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு கடை வீதிக்குச் சென்றார். அப்போது, அவரது பேண்ட்லிருந்த ரூ.8 ஆயிரம் பணம் காணாமல் போனது.

    இது குறித்து கிம்ராம், பெரியகடை போலீஸில் புகார் கொடுத்தார். அதே நேரத்தில், புதுவை நகர கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வரும் முரளி (40), அவரது நண்பர் தட்சணாமூர்த்தி (35) ஆகியோர் கடை வீதி வழியாகச் சென்றுள்ளனர். அப்போது கீழே கிடந்த ரூ.8 ஆயிரம் பணத்தை புதுவை பெரியகடை போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

    இதனையடுத்து, பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜிந்தாகோதண்டராமன், சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸார், பணத்தை கிம்ராமிடம் ஒப்படைத்தனர்.

    வங்கி ஊழியர் முரளி, தட்சணாமூர்த்தி ஆகியோரை போலீஸார் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai