சுடச்சுட

    

    சோனியா படத்தை வைத்துக் கொண்டு ஏன் மோடிக்கு பிரசாரம்

    By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி படத்தை வைத்துக் கொண்டு நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து மக்களை முதல்வர் ரங்கசாமி ஏமாற்றுகிறார் என அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பிரமுகர் ரவுல் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவில் தொகுதித் தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் பலராமன், செல்வபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, வழக்குரைஞர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி ரயில் நிலையத்தில் 3 ஆண்டுக்கு முன்பு சென்னை, விழுப்புரத்துக்கு மட்டுமே ரயில் சென்றது. ஆனால் எனது முயற்சியால் 11 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்துக்கு சுமார் ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்களுக்கு முழுமையாக மத்திய அரசு நிதி செலவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினேன்.

    ஆனால் நான் ஒன்றுமே செய்யவில்லை, இதனால் விவாதம் தேவையில்லை என ரங்கசாமி கூறியுள்ளார். எனது பட்டியலில் தவறு இருந்தால் அவர் வெளிப்படையாக குற்றம் சாட்டலாம்.

    2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமி 30 கிலோ அரிசி தருவேன், முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக வழங்குவேன், வீடு கட்டும் நிதியை உயர்த்தி வழங்குவேன், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின், கலர் டிவி தருவேன் என வாக்குறுதி அளித்தார். அதில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா?.

    அரசு துறைகளில் பல மாதமாக சம்பள பாக்கி உள்ளது. 7 மாதமாக பாசிக் நிறுவனத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ரொட்டி பால், சிற்றுண்டி திட்டம், ஒற்றை அவியல் அரிசி திட்டத்தை ரங்கசாமி நிறுத்தி விட்டார். அவர் 3 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. சோனியாவின் படத்தை தனது அலுவலகத்தில் வைத்துக் கொண்டு மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம் என ரங்கசாமி பிரசாரம் செய்

    கிறார். உப்பளம் தொகுதியில் காங்கிரஸ் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai