சுடச்சுட

  

  இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழகம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 58 பேர் காரைக்கால் துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்து சேர்ந்தனர்.

  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 34 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இவர்களை கடந்த மாதம் 28-ம் தேதி இலங்கை அரசு விடுதலை செய்தது. இவர்களின் 13 படகுகளும் விடுவிக்கப்பட்டன.

  மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கடலோரக் காவல்படைக்கு சொந்தமான "சாரங்' என்ற கப்பல் மீனவர்களை பாதுகாப்பாக காரைக்காலுக்கு புதன்கிழமை காலை அழைத்து வந்தது. கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், மீனவர்களை மீனவளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai