சுடச்சுட

  

  தேச விளக்கி மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணி மும்முரம்

  By காரைக்கால்  |   Published on : 03rd April 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் பகுதி புதுத்துறையில் உள்ள ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெறுகிறது. கோயிலுக்கான காங்கிரீட் மேல் தளம் அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

  காரைக்கால் புதுத்துறை கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயிலாக மாரியம்மன் கோயில் இருந்தது. பிரெஞ்சு நிர்வாகப் பகுதியாக விளங்கிய காரைக்காலில் கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து பொருள்கள் வந்துகொண்டிருந்தது. அப்போது இக்கோயிலில் எரியும் விளக்கின் வெளிச்சமே கப்பலுக்கு துறைமுகத்தைக் காட்டு கலங்கரை விளக்கமாக இருந்ததாம். இதைக்கொண்டு கப்பல் துறைமுகத்தை நோக்கி வந்துள்ளது. இதனால் இக்கோயில் மாரியம்மன், தேச விளக்கி மாரியம்மன் என்ற பெயருடன் விளங்கத் தொடங்கியது.

  புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட காரைக்கால் ஸ்ரீ செங்கழனி விநாயகர் கோயிலுக்கு சொந்தமானதாக இக்கோயில் உள்ளது. முற்றிலும் புதிதாக இக்கோயில் கட்டுமானப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

  ரூ.24 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டு நடக்கும் கட்டுமானப் பணியில் முக்கிய பகுதியாக, கோயிலுக்கு மேல் தளம் காங்கிரீட் போடும் பணி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி ஏ.ராஜராஜன்வீராசாமி முன்னிலையில் புதன்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டு தொடங்கியது.

  கோயில் தனி அதிகாரி அமிர்தலிங்கம், திருப்பணிக் குழு பக்கிரிசாமி தலைமையிலான உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கோயிலில் பல்வேறு சிற்பங்கள், சுதை வேலைப்பாடுகளுடன் பணிகள் நடக்கிறதெனவும், அடுத்த ஓரிரு மாதத்தில் குடமுழுக்குக்கான தேதி முடிவு செய்யப்பட்டுவிடுமென திருப்பணிக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai