சுடச்சுட

  

  தேர்தல் பறக்கும்படை எனக் கூறி ரூ.7.35 லட்சம் வழிப்பறி

  By புதுச்சேரி  |   Published on : 03rd April 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே தேர்தல் பறக்கும்படை பெயரில் போலியாக வாகனச் சோதனை நடத்திய மர்ம கும்பல், பைக்கில் வந்த வியாபாரியிடம் ரூ.7.35 லட்சத்தை புதன்கிழமை பறித்துச் சென்றுள்ளனர்.

  புதுவை மாநிலம், ஏம்பலம் அருகே உள்ள புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவஞானசேகர் (45). இவர், புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே கம்ப்யூட்டர் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை காலை புதுக்குப்பத்தில் உள்ள வீட்டிலிருந்து பைக்கில் புதுவைக்குப் புறப்பட்டார். அவரிடம் ரூ.7.35 லட்சம் பணம் இருந்துள்ளது.

  வடமங்கலத்தைக் கடந்து புதுவை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் திரும்பினார். அப்போது வில்லியனூர் ஆற்றுப்பாலம் அருகே கார் அருகே நின்றிருந்த 4 பேர் அவரை வழி மறித்து நிறுத்தினர். தேர்தல் பறக்கும் படையினர் எனத் தெரிவித்த அவர்கள், பைக்கை சோதனையிட்டனர்.

  அப்போது பேக்கில் வைத்திருந்த ரூ.7.35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்ட அவர்கள், பணம் எப்படி வந்தது எனக் கேட்டுள்ளனர். இதன் பின்னர், பணத்துக்கான ஆவணங்களை மங்கலம் காவல் நிலையத்தில் காட்டி விட்டு பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் காரில் சென்று விட்டனர்.

  சிவஞானசேகர் உடனே பைக்கில் மங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று அவர்களுக்காக காத்திருந்துள்ளார். அங்கு யாரும் வராததால் சந்தேகமடைந்து, போலீஸாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீஸார் தேர்தல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அப்படி எதுவும் பறிமுதல் செய்யவில்லை. அவர் கூறும்படியான காரில் பறக்கும் படையினர் யாரும் கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

  இதனையடுத்து, "தேர்தல் துறையினர்' என வாகனத்தில் ஸ்டிக்கர்களை ஒட்டி போலியான கும்பல் வழிப்பறி செய்துள்ளது தெரிய வந்தது.

  இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீஸார், சிவஞானசேகரிடம் விசாரணை நடத்தினர்.

  தேர்தல் பறக்கும் படையினர் பெயரில் வழிப்பறி செய்த கும்பல் விழுப்புரம் நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் வழியாகத் தப்பிச் சென்றுள்ளது. தமிழக, புதுவை காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai