சுடச்சுட

  

  நரேந்திர மோடி எந்த வகையில் சிறந்தவர் என்று தமிழக மக்களுக்கு வைகோ தெளிவு படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ அ.சௌந்தரராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்குச் சேகரிக்கும் பொதுக்கூட்டம் பாரதிதாசன் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிரதேச செயலர் வெ.பெருமாள் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை கட்சித் தலைவருமான அ.சௌந்தரராசன் பேசியதாவது:

  ஊழல் கங்கிரஸ் கட்சி மத்தியில் அப்புறபடுத்தபடும் என்றும், அடுத்து அமையப்போகும் ஆட்சியில் அதிமுக பங்கேற்ககூடிய ஆட்சி அமையும் என்றும், பாஜக பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தயக்கம் உள்ளது. அவரை எது மாற்றியது என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.

  வைகோவிற்கு கேள்வி: தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபட்ச குற்றவாளி என்று நாம் கூறி வருகிறோம். அதைப்போல் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் மோடி. இன்றைக்கும் 32 காவல்துறை அதிகாரிகள் சிறையில் உள்ள அவலம் உள்ளது.

  இந்நிலையில் பெரியார் வழி வந்தவர் என்று கூறி வரும் வைகோ மோடி எந்த வகையில் நாட்டின் பிரதமருக்கு தகுதியானவர் என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

  இந்த நாட்டிற்குத் தேவை ஆள்மாற்றமோ, ஆட்சி மாற்றமோ இல்லை, கொள்கை மாற்றம் தேவை. அந்த வகையில் மாற்றுக் கொள்கையை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் இடதுசாரி கட்சி வேட்பாளர் விசுவநாதனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

  பார்வடு பிளாக் கட்சித் தலைவர் முத்து, புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சி தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai