சுடச்சுட

  

  இலங்கை தமிழர்கள் பிரச்னையில் அமைச்சர் நாராயணசாமி இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரியில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இதற்கு மத்திய காங்கிரஸ் அரசு தான் காரணம்.

  ஆனால் இம் முடிவு வேதனை தருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார். மத்திய அமைச்சரவை முடிவை எதிர்த்து தனது பதவியை ராஜிநாமா செய்ய நாராயணசாமி தயாராக உள்ளாரா எனத் தெரிவிக்க வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும்.

  முதல்வர் ரங்கசாமி தனது அலுவலக அறையில் சோனியா காந்தி படத்தை வைத்துக் கொண்டு, நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்குக் கேட்பது விந்தையாக உள்ளது.

  தனது சொந்த கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவரை என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். காங்கிரஸ்,என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் பணம் மற்றும் அதிகாரப் பலத்தால் மாற்றுக் கட்சியினரை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  பாஜக என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் பாமகவுக்கு மதிமுக உள்பட பிற கட்சிகள் ஆதரிப்பதாக கூறியுள்ளன.

  மோடிக்கு ஆதரவாக என்.ஆர். காங்கிரஸýம், பாமகவும் வாக்குச் சேகரிக்கின்றன.

  முதல்வரும், மத்திய அமைச்சரும் தங்கள் தவறுகளை மறைக்க மாறி மாறி புகார் கூறுகின்றனர். நாராயணசாமி தொகுதி மேம்பாட்டு நிதியையே முறையாக செலவழிக்கவில்லை என ரங்கசாமியும், மாநில அரசு தான் திட்டங்களுக்கு

  ஒப்புதல் தரவில்லை என நாராயணசாமியும் கூறி வருகின்றனர். மக்கள் வரும் தேர்தலில் இருவரையும் புறக்கணித்து அதிமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai