சுடச்சுட

    

    பாஜக தேர்தல் பிரசாரம்: ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பிரசாரத்தை முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனை பாஜக ஆதரித்து வருகிறது. தேர்தலிலும் அவருக்குப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான விழா நேரு வீதி-பாரதி வீதி சந்திப்பில் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் கே.தாமோதர், ஆர்.கேசவலு, வி.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிர்வாகிகள் ஐ.அன்புச்செல்வம், தங்க.விக்ரன், வி.பரந்தமன், பி.ஜெயந்திமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai