சுடச்சுட

    

    பாமகவுக்கு விவேகானந்தர் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் ஆதரவு

    By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.கே.அனந்தராமனுக்கு அகில இந்திய விவேகானந்தர் இளைஞர்கள் விழிப்புணர்வு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    அதன் நிறுவனர் என்.எஸ்.பாலு புதன்கிழமை கூறியதாவது: பொதுமக்கள் நலன், புதுவை மாநில முன்னேற்றம் கருதியும், பாமக வேட்பாளருக்கு ஆதரவாக இசை மற்றும் கிராமப் பாடல்கள் மூலம் பிரசாரம் செய்ய உள்ளோம்.

    நரேந்திர மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமையவும், புதுவையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம் என்றார் பாலு. பின்னர் பாமக மாநில அலுவலகத்துக்குச் சென்று வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவு தெரிவித்தார் பாலு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai