புதுவைத் தமிழ்ச் சங்க மாதர் திருநாள்
By புதுச்சேரி, | Published on : 03rd April 2014 04:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாதர் திருநாள் விழா தமிழ் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கோ.பாரதி, சீனு.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
மாதர் திருநாள் குறித்த கருத்தரங்கத்துக்கு முனைவர் நாக.செங்கமலத்தாயார் தலைமை வகித்தார். சங்கக் கால மகளிர் என்ற தலைப்பில் பேராசிரியை இரா. விசாலாட்சி, இக்கால மகளிர் என்ற தலைப்பில் பாவலர் பூங்குழலி பெருமாள் ஆகியோர் பேசினர்.
புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் இளமதி ஜானகிராமன் பேசி
னார்.