சுடச்சுட

    

    புதுவை அருகே மருத்துவக் கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து தனிப்படைகள் அமைத்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடி வருகின்றனர்.

    புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த இளவரசி (18), திருச்சியைச் சேர்ந்த ராதிகா (18) ஆகியோர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர்கள், கடந்த வியாழக்கிழமை இரவு காணாமல் போயினர்.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஓம்வீர்சிங், கண்காணிப்பாளர் பைரவசாமி உள்ளிட்டோர் கல்லூரி நிர்வாகம், விடுதி மாணவிகள், ஊழியர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து, மாணவிகள் வலை தளங்களில் தொடர்பு கொண்டிருந்த இளைஞர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து தனிப்படை போலீஸார் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai