சுடச்சுட

  

  6-ல் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விநாடி வினா போட்டி

  By புதுச்சேரி  |   Published on : 03rd April 2014 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விநாடி } வினா போட்டி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

  தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகமும், புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகமும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின் ஊடகவியல் துறை ஆகியன இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கல்லூரிகளிலிருந்து 3 உறுப்பினர்களைக் கொண்ட அணிகள் கலந்து கொள்ளலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் ஜனநாயகம், பஞ்சாயத்து ராஜ், நாடாளுமன்றம் மற்றும் அதன் செயல்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பொறுப்புகள், தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல், மத்திய மற்றும் மாநில அரசு உறவுகள், தேசத்தை முன்னேற்றுவதில் இளையோரின் பங்கு ஆகிய தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும்.

  முதல் 2 அணிகள் மற்றும் சிறந்த 6 அணிகளுக்கான சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் பார்வையாளர்கள் பரிசுகளும் உண்டு.

  போட்டி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளி (நஸ்ரீட்ர்ர்ப் ர்ச் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) அரங்கில் ஏப்ரல் 6-ம் தேதி காலை 9.30 மணி அளவில் பதிவு செய்து கொள்ளலாம்.

  புதுச்சேரி மண்டலச் சுற்றில் தேர்ச்சி பெறுவோர், ஏப்ரல் 13-ம் தேதி இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னையின் (ஐஐப, இட்ங்ய்ய்ஹண்) மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான இறுதி சுற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

  இத்தகவலை புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai